AgaraMudhalvan
Favoured Frenzy
˙·٠•●♥♥●•٠·˙போலி˙·٠•●♥♥●•٠·˙
உடன் இருக்கும் போது
பல நேரங்களில் i miss you
என்றவர்கள்,
உடன் இருக்கும் போது
சில நேரம் உன் நினைவுகள்
வந்தது என்றவர்கள்,
உடன் இருக்கும் போது
கவலையின் போதோ
மகிழ்வின் போதும்
உன் கரங்களை இருக்கிப்
பிடிக்க வேண்டும் என்றவர்கள்
எல்லாம்,
பிரிந்து சென்ற பிறகும்
அப்படியான தருணங்கள்
அவர்களுக்கு நிகழ்ந்திருக்குமா
அது எப்படி உடன் இருக்கும்
போது மட்டும் அத்தனையிலும்
நம்மை தேடிக் கொண்டவர்கள்,
பிரிவுகளின் பின் தேடாமலிருக்க
முடியும்
அவர்களே மறந்தாலும்
அவர்களின் நினைவுகளுமா
எங்களை மறந்துவிட்டது
அப்படியில்லையென்றால்
உடன் இருக்கும் போது
சொன்னவைகள் எல்லாம்
எம்மை மகிழ்வுக்க மட்டும்
எதற்காக இந்த பொய்யான
மகிழ்வுகளை தர வேண்டும்
இலகுவாக அனைத்தையும்
சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்கள்
அதனை தூக்கிக் கொண்டு சுமப்பது நாங்கள் தானே
போலியென்றாலும் பரவாயில்லை
அது ஏன் உண்மைகள் போல
சொல்லிக் கொண்டு நடிக்கின்றீர்கள
I LOVE YOU
I MISS YOU
என்ற வார்த்தைகள் எல்லாம்
வெறும் வார்த்தைகளாக மட்டும்
முடிவதில்லையே
உணர்வுகளின் வெளிப்பாடாய்
அமையும் வார்த்தைகளை
உங்களின் கைப் பாவையாய்
பாவனை செய்து கொள்ள வேண்டாமே