AgaraMudhalvan
Favoured Frenzy
˙·٠•●♥♥●•٠·˙தானம்˙·٠•●♥♥●•٠·˙
இமைக்குள் இருக்கும்
விழிகளது
வானில் நீந்தும்
விண்மீண்கள் தானா
அகத்தின் ஆனந்தம்
முகத்தினில் மிளிற
துளிர் புன்னகையது
இதழோர வெட்கத்தை கலவையாக்கி
காட்சி தருகிறாயா
தேய்பிறையும் வளர்பிறையும்
விண்நிலவுக்கு மட்டும்தான்
தேயா நிலவது நீ தானே பெண்ணே
மனம் ஈர்த்தே
மண்டியிட தூண்டுகிறாய்
அழகே உன் அன்பதனை
நான் பெறவே
வரமாய் இல்லையெனினும்
தானமாய் தந்து போ
உன் இதயத்தை
இந்த யாசகன் வளம் பெறவே