• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
HoneyLips
Reaction score
2,238

Profile posts Latest activity Postings About

  • நம்மள விட்டுட்டு போனவங்களாம் எந்த கவலையும் இல்லாம JAMMUNU இருக்காங்க..,
    நாம தான் எதையும் மறக்க முடியாம
    அதையே நெனச்சுக்கிட்டு
    இன்னும் UMMUNU இருக்கோம் ...!
    நம்மை மகிழ்வித்த தருணங்களில் முதலாவுதாக இருப்பது....

    நம் மனதிற்கு பிடித்தவர்களுடன் இருந்த தருணங்களே....

    -sugarlips
    அவள் பூ(அன்பு)க்களை
    சுமந்து கொண்டு
    பவனி வருகிறாள்...

    அந்த பூ யார் கரம்
    பற்றுகிறதோ
    நிச்சயம்
    அங்கே நேசத்தின்
    வாசனை நெகிழ்ந்து
    மன(ண)ம் கமழும்.... ♡♡♡
    இதுவரை நினைவுகளையே வட்டியும் முதலுமாக கட்டிக் கொண்டிருக்கிறேன் ....!
    ஆனாலும் மீட்க முடியவில்லை .....! உன்னிடம் அடகு வைத்த என் இதயத்தை.....!
    :heart1:

    -sugarlips
    எத்தனை முறை காயப்பட்டாலும் மனதிற்கு பிடித்தவரை ஒரு போதும் வெறுக்காது "இதயம்"

    வெறுப்பது போல நடிக்க மட்டுமே செய்யும்...

    -sugarlips
    யாரோ அன்பாக ஓரிரு
    வார்த்தை பேசி விட்டு
    போனதற்காக...

    அவங்களையே தேடி அலையும்
    இந்த நாய்க்குட்டி
    மனசுக்கு எப்படி சொல்லி
    புரிய வைப்பேன்...

    நீ பார்ப்பதெல்லாம்
    மாய வலை ~ அதில்
    சிக்குண்டு சிதறி விடாதே என்று..!!

    என் தேகம் தீண்டும் அன்பு
    வேண்டாம்..

    இந்த ஏகாந்த தனிமையை
    கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொள்ள
    என் இதயம் தீண்டும் அன்பு போதும் .
    இது இங்கே எப்படி சாத்தியமாகும்...?

    ஜவுளி கடை பொம்மை கூட
    சேலை கட்டி இருந்தால்
    நின்று நிதானமாக உற்று பார்க்கும்
    உலகில் அல்லவா நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...

    -sugarlips
    நான் யாரென்றே தெரியாத போது
    உங்கள் நேசத்தின்
    கரங்கள் ஈரம் காயாது
    என்னை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது

    இப்போது என்னைப்பற்றி
    முழுமையும் அறிந்து கொண்டதும்
    சட்டென உலரத் தொடங்கிவிட்டது
    உங்களது அன்பும் சரி ஆர்வமும் சரி..

    உங்கள் நேசமெனும் அகராதியில்
    அன்பென எதை எழுதுகிறீர்கள்
    எனக்கு கொஞ்சம் விளக்கம்
    தாருங்கள்....

    சில நேரங்களில் முகங்களற்று
    முகவரியற்று இருப்பதும் கூட
    நிம்மதியை தருகின்றது..

    இங்கே இப்போது நான் நானாக
    இல்லை என்பதே எனக்கு மிகவும்
    வருத்தமாக இருக்கிறது...

    என் நிஜத்தை வெளிப்படுத்தாத
    வரையில் நான் நானாக இருந்தேன்
    இப்போது இங்கே
    இருப்பது நானென்றபோதிலும்
    என்னில் நானில்லை என்பதே உண்மை...
    அண்ணே ஏண்ணே சோகம்மா இருக்கீங்க?...

    "என் பொண்டாட்டி மூணு மாசம் என் கூட பேச மாட்டேன்னு சொல்லிட்டாப்பா"

    அதுக்கு சந்தோசமுள்ள படனும். ஏன் அழுவுறீங்க ?

    "அந்த மூணு மாசம் இன்னையோ முடியுதுப்பா"

    Good Night
    எந்தவித சிந்தனையுமற்று
    எதையும் எழுதவும்
    தோணாமல்...

    சலனங்களற்று இருப்பது கூட
    ஒரு சுதந்திரமான
    உணர்வை கொடுக்கிறது
    இந்த மனதுக்கு...

    இப்போதைக்கு என்
    மனதை ஆற்றுப் படுத்த
    ஒரு குவளை தேனீரும்
    இந்த தனிமையும்
    போதுமானதாக இருக்கிறது... !!
    FB_IMG_1730916797317.jpg
  • Loading…
  • Loading…
  • Loading…
Top