✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
அருமையான கதை

'ரப்பரைப் பார்த்து பென்சில் சொல்கிறது, ' ஒவ்வொரு முறை நான் செய்யும் தவறுக்கும், என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய்.
ஆனால் என்னை சுத்தம் செய்யும் போது நீ கரைந்துக் கொண்டே போகிறாயே, அது எனக்கு வருத்தமாக இருக்கிறது' என்று.
இரப்பர் அதற்கு அது என் கடமை, நான் படைக்கப்பட்டதே அதற்குத் தான். என்னைக் கண்டு நீ வருந்த வேண்டாம்.
இதில் எனக்கு முழு மகிழ்ச்சி.
என்னால் உன் தவறுகள் அழிக்கப்பட்டு, நீ திருத்தங்களுடன் முன்னேறி சென்றால் அதுவே என் வெற்றி.
நான் கரைவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை' என்றது.
அந்த இரப்பர் வேறு யாருமில்லை. நம் பெற்றோர் தான். அவர்கள் ஆயுள் முடியும் வரை நம் தவறுகளை திருத்திக் கொண்டே இருப்பார்கள்.
நம் மீது பொறாமைபடாத இரு உள்ளங்கள் நம் பெற்றோர்கள்.
✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚