゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
நீ இல்லாமல்
வாழவே முடியாதென
சொல்ல வைத்தவர்கள்தான்
அவர்கள் இல்லாமலும்
வாழக் கற்றுத் தந்தவர்கள்...
பூத்து,காய்த்து நிரம்பிய அன்பின் தழும்புகளை
உதறிவிட்டு போய்விடும் போது
வாழ்வின் ஆணிவேர்
ஆட்டம் காணத்தான் செய்கிறது
பட்டுப் போகாமல்
இதுவரை காத்ததெல்லாம்
எந்த எதிர்பார்ப்பும் இன்றி
ஒரு கை நீர் அள்ளி
தெளித்துப் போன
மகத்துவமான மனங்களே..
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚