• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
A
Reaction score
2,229

Profile posts Latest activity Postings About

  • ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

    FB_IMG_1742267591768.jpg
    அவளை எட்டித் தொட்டுவிட
    நிமிடம் நிமிடமாக சுவற்றின் மீது ஊர்ந்து வந்த சன்னலின் நிழல் கம்பிகள் அவளருகே வந்ததும் வெட்கத்தின் மூச்சிறைப்போடு
    அவள் மீது படிய உண்டான கதகதப்பின் காரணம் சூரியன் என்றெண்ணினாள் புரியவில்லை அவளுக்கு அது சன்னல் கம்பிகளின் பின்னால் நிற்குமவனின் பெருமூச்சின் அனலென்று.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ஒன்னுக்கு முட்டிக்கிட்டு வரணும், அப்படி தண்ணி குடிக்கணும்.

    வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    அழகிய காலை வணக்கம்
    வெறுமையான பக்கத்தில்
    என்ன வேண்டுமானாலும் எழுதலாம்,
    ஏற்கனவே எழுதி முடித்த பக்கத்தில்
    நான் புதிதாக எதை எழுதினாலும்
    அது கிறுக்கலாகவே.
    தெரியும்!அப்படியே என் காதலும்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    FB_IMG_1742225577123.jpg
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    காதல்ல இருக்கிறவங்க கிட்ட விட.
    காதலை இழந்தவங்க கிட்ட தான் .
    எழுத்தும் காதலும் அதிகம் புழங்கும்.
    ஏன்னா காதலை இவங்க விட்டாலும்.
    காதல் இவங்களை விட்டுருக்காது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவு வணக்கம்

    FB_IMG_1741366563632.jpg

    அவள் என் அவள் இல்லை என தெரிந்த பின்பும்....

    அவளுடனானா ஆட உறவு தற்காலிகம் தான் என தெரிந்த பின்பும்.....

    அவள் அவனின் கற்பனை பிம்பம் தான் என உணர்த்த பின்பும்...

    ஏன் இத்தனை மயக்கம் அவள் மேல் மட்டும்?

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​

    நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு உனது பதில் ஹ்ம்..

    என்றபோதே எனது அடுத்த குறுஞ்செய்தி அனுப்பப்படாமலேயே அழிக்கப்பட்டது

    காரணம்

    உன்னிடமிருந்து வருவது அந்த ஒற்றை வார்த்தைதானே

    என்பதால்
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    FB_IMG_1741177615444.jpg
    வயது மட்டும் வருடா வருடம் வளர்ந்து கொண்டே செல்கிறது..

    மனமோ இன்னும் மழலையாகவே இருக்கிறது உந்தன் அதீத காதலால்...!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​

    IMG_20250305_204929.jpgஒருவருக்கு தொல்லையாக இருக்கும் அன்பு இன்னொருவருக்கு பொக்கிஷமாக இருக்கக்கூடும்.....!!!!

    எனவே உங்கள் அன்பிற்கு தகுதி இல்லாதவர்களிடம் அத்தனையும் கொட்டித் தீர்த்து விடாதீர்கள்...!!!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

    ꧁❤•༆வாடி வா༆•❤꧂​

    உன் வெட்கங்களை
    தூண்டி
    உன் ரகசியங்களை
    சீண்டி
    உன்னை எனக்குள்
    இல்லை என்னை
    உனக்குள்
    ஒளித்து வைத்து
    கண்ணாமூச்சி விளையாட
    எப்போதுமே
    என் பருவத்துக்கு
    ஆசை ❤

    உன் இதழ்களின்
    இருக்கத்தில்
    உறக்கத்தில் வாழ
    எப்போதுமே
    என் மீசைக்கு
    ஆசை ❤

    வாடி வா
    அமுத கடலில்
    என்னோடு சேர்ந்து
    நீந்த
    வாடி வா ❤

    நீ விரும்பிய
    நான் விரும்பிய
    அனைத்தையும்
    நன் அனைத்தலின்

    சுகத்திலே
    தீர்த்து வைப்போம் ❤
    images - 2025-02-10T114137.708.jpeg
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவு வணக்கம்
    காத்திருக்கிறேன் உன்னை கட்டி தழுவ, ஆனால் உறக்கம் உனக்கு முன் என்னை கட்டித் தழுவிக் கொள்கிறது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    நீ இல்லாமல்
    வாழவே முடியாதென
    சொல்ல வைத்தவர்கள்தான்
    அவர்கள் இல்லாமலும்
    வாழக் கற்றுத் தந்தவர்கள்...

    பூத்து,காய்த்து நிரம்பிய அன்பின் தழும்புகளை
    உதறிவிட்டு போய்விடும் போது
    வாழ்வின் ஆணிவேர்
    ஆட்டம் காணத்தான் செய்கிறது

    பட்டுப் போகாமல்
    இதுவரை காத்ததெல்லாம்
    எந்த எதிர்பார்ப்பும் இன்றி
    ஒரு கை நீர் அள்ளி
    தெளித்துப் போன
    மகத்துவமான மனங்களே..
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    அதிகாலை மூன்று மணி
    தூக்கம் விழிக்கிறேன்
    ஊரெங்கும் நிசப்தம்
    என் அறையின்
    மின் விசிறி ஓயாமல்
    புலம்பிக் கொண்டிருந்தது
    கடிகார முட்கள்
    மெல்லிய ஓசையோடு
    காலத்தை சிரமப்பட்டு
    நகர்த்திக் கொண்டிருந்தது
    இருளின் சங்கிலியால்
    நான் பிணைக்கப்பட்டிருந்தேன்
    தூக்கம் கலைந்ததும்
    எண்ணங்களில்
    என் கடமைகள்
    துளிர் விட்டு இருந்தன
    அதன் நடுவே
    உன் நினைவுகள்
    எனும் மொட்டுகள்
    அழகாக பூக்கத் தொடங்கின
    மெல்லப் புலர்கிறது
    என் வானம்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    Are you OK?
    Yes I'm OK
    என சொல்லி புன்னகையோடு நகர்வது வேறொன்றுமில்லை,

    அவர்களின் புன்னகையும் அமைதியும் திருப்தியும் கெட்டுவிடக் கூடாதென்று.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ஒரு பெண் தன்னை ஒருவனுக்கு ஒப்படைக்கும் வரை தான் அவள் வாழ்க்கை அவள் கையில்,
    அதன் பிறகு அவள் இந்த உலகில் ராணியாக வாழ்வதும்,
    நடை பிணமாக வாழ்வதும் அவள் நம்பி வந்த ஆணின் கையில் தான் இருக்கிறது.
    FB_IMG_1740894498237.jpg
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காலை வணக்கம்
    euclidean-vector-pattern-champagne-gold-pattern-vector-1784547124b0354de85e907686d0b563.png
    எனக்குப் பிடித்த எண்

    cancer-zodiac-astrological-sign-horoscope-astrology-cancer-zodiac-sign-silver-png-clip-art-ima...png


    என்னுள் நீயும்
    உன்னுள் நானும்

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

    beauty-parlour-cosmetics-eyelash-model-beauty-parlour-cosmetics-2d1f0fb460406f11c9d71760e355bb64.png
    பெண்கள் இல்லாத உலகில் அன்பு நிலைத்திருப்பதில்லை அன்பு இல்லா உலகில் மனிதன் வாழ்திருப்பதில்லை..!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவு வணக்கம்

    FB_IMG_1740376859103-removebg-preview.png
    கொலுசின் கொக்கிகளை என்ன என் இதயத்திலா மாட்டினாள்..?

    அவளை தொடந்தே அழைந்து கொண்டிருக்கிறது.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    புரிதல் என்பது வேறொன்றுமில்லை

    ஒருவர் சொல்ல வரும் விஷயத்தை அவர்கள் பேசி முடிக்கும் வரை இடையில் உங்கள் வாதங்களை வைக்காமல்...

    அவர்கள், சொல்வதை முழுவதும் காது கொடுத்து கேட்பதே ஆகும்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
  • Loading…
  • Loading…
  • Loading…
Top