எத்தனை பெண்கள் என்னிடம் பேசினால் என்ன எந்தப் பெண்ணுக்கும் உன்னுடைய சாயலில்லை..
எத்தனைப் பெண்கள் என்னைப் பார்த்தாலென்ன எந்தப் பெண்ணுக்கும் உன்னுடைய கண்கள் இல்லை..
எந்த மர நிழலிலும் உன்னுடைய ஆறுதல் இல்லை..
எந்த வாழ்த்திலும் உன்னுடைய குரல் இல்லை..
எத்தனை பெண்ணுக்கும் உன் பெயர் இருந்தால் என்ன எந்த பெண்ணுக்கும் உன் அனிச்சை குணம் இல்லை..
ஆக மொத்தத்தில் உன் போன்ற பெண் வேறெங்கும் இல்லை உன்னை விட வேறெதுமிங்கு எனக்கு பெரிதில்லை..