நீ சந்தித்த ஆண்களில்,
நான் வேறுபட்டவன்.
நான் சந்தித்த பெண்களில்,
நீ வேறுபட்டவள்.
என்றெல்லாம்
எண்ணிக்கொண்டு
நித்தம் அதனை நிரூபிக்கும்
முயற்சிகளில் சோர்ந்து
அப்படியெல்லாம் இல்லை
இருவரும் சாதாரணமானவர்கள்தான்
என்றுணரும் நாளில்
எல்லோரையும் போல்
நாம் காதலிக்கத் தொடங்கியிருப்போம்...!